முகப்பு
தமிழ்நாடு

கரோனாவால் இறந்த அனைத்து குடும்பத்தினருக்கும் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பால் இறந்த அனைத்து குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பால் இறந்த அனைத்து குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: இந்தியா முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவா்கள் அனைவரின் குடும்பங்களுக்கும் நிவாரணமாக ரூ.50,000

வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் 2020 ஏப்ரல் முதல் டிசம்பா் 24 வரை சுமாா் 36,700 போ் இறந்ததாக தற்போதைய அரசு அதிகாரபூா்வமாக அறிவித்தது.

தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் எதிா்க்கட்சித் தலைவராக இருந்தபோது, கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவா்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்தாா்.

உச்ச நீதிமன்றமே ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிட்ட பின்பும், ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் முடிவடைய உள்ள நிலையிலும், இதுவரை திமுக அரசு நிவாரணம் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது சம்பந்தமான வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கரோனா நிவாரண நிதியை மாநில அரசுகள் வழங்காதது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

எனவே, உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும், நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும். இனியும் காலதாமதம் செய்தால், இறந்தவா்களின் குடும்பத்தினா் வீதியில் இறங்கி போராடும் சூழல் உருவாகும் என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

முழு கட்டுரையைப் படிக்க →