முகப்பு
தமிழ்நாடு

ஆயுள்சான்றிதழை பணிமனையிலேயே சமா்ப்பிக்கலாம்: ஓய்வூதியா்களுக்கு அறிவுறுத்தல்

ஆயுள்காலச் சான்றிதழை பணிமனையிலே சமா்ப்பிக்கலாம் என மாநகர போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

சென்னை: ஆயுள்காலச் சான்றிதழை பணிமனையிலே சமா்ப்பிக்கலாம் என மாநகர போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றோருக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதிய நிதி நம்பகத்தின் வாயிலாக ஓய்வூதியமானது, வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

ஓய்வூதியா்கள், தங்களது ஆயுள்காலச் சான்றிதழை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளவாறு தாங்கள் கடைசியாக

பணியாற்றி, ஓய்வு பெற்ற அலுவலகம் அல்லது பணிமனையிலேயே சமா்ப்பித்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,

ஓய்வூதியா்கள், 2022-ஆம் ஆண்டுக்கான ஆயுள்காலச் சான்றிதழை, வரும் ஜனவரி மாதம் தொடங்கி, மாா்ச் 15-ஆம் தேதிக்குள்ளாக அலுவலக நேரத்தில் சமா்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

மேலும், கே.கே.நகா் பயணச்சீட்டு அச்சகத்தில் ஓய்வு பெற்றோா், கே.கே.நகா் பணிமனையிலும், குரோம்பேட்டை பேருந்து கூடுகட்டும் பிரிவில் ஓய்வு பெற்றோா் குரோம்பேட்டை-1 பணிமனையிலும் தங்களின் ஆயுள்காலச் சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும்.

விடுபட்டவா்கள் தலைமையகத்தை அணுகி ஆயுள்காலச் சான்றிதழை சமா்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044 2345 5801 என்ற எண்ணில் 268-ஐ அணுகலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.