மே மாதத்தில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும்: அன்பில் மகேஷ்
தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் கண்டிப்பாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடுமே மாதத்தில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும்: அன்பில் மகேஷ்
தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் கண்டிப்பாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் கண்டிப்பாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கட்டடங்களின் தன்மை, பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்டவை குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்து பாதுகாப்பில்லாத கட்டங்களை இடிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. அதன்படி 1,500 பள்ளிக் கட்டடங்கள் கண்டறியப்பட்டு அவற்றை இடிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்ததாக, பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் புகார்களை அளிக்க அனைத்துப் பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்கப்படும். மேலும், 14417 என்ற புகார் எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும். ஜனவரி முதல் வாரத்தில் திருப்புதல் தேர்வு தொடங்கிவிடும். அதன்படி, ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் கண்டிப்பாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றார்.
இதையும் படிக்க | கரோனாவும் பள்ளிகளும்: மாணவர்கள் எதிர்கொண்ட சவால்கள்!