தமிழ்நாடு

புதுச்சேரியில் புத்தாண்டு நடன நிகழ்ச்சியைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம்: 50 பேர் கைது

DIN

புதுச்சேரியில் கலாசாரத்துக்கு எதிரான புத்தாண்டு நடன நிகழ்ச்சியைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்திய 50 பேரை போலீஸார் கைது செய்தனர். 

புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில், பிரபல சினிமா நடிகைகளின் ஆபாச நடனம் நடத்த அனுமதி அளித்த புதுச்சேரி சுற்றுலாத்துறையைக்  கண்டித்தும், அதற்குத் தடை விதிக்கக் கோரியும், வியாழக்கிழமை காலை நடனம் நடத்தும் இடமான புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தை இழுத்து பூட்டும் போராட்டம் நடைபெற்றது.

பொதுநல அமைப்புகள் சார்பில் நடைபெற்று முற்றுகைப் போராட்டத்தில், புத்தாண்டு நடன காட்சிகள் நடைபெற உள்ள வளாகத்தில் புகுந்து, பதாகைகளை கிழித்தும், நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தியும், தமிழர்களம் அமைப்பு அழகர் உள்ளிட்ட 50 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரோனா தொற்று பரவும் சூழலில், நடன நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என கண்டனம் கோஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை ஒதியன்சாலை போலீஸார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT