அண்ணா நினைவு நாள்: ஊத்தங்கரை அதிமுக சார்பில் மரியாதை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்டத் துணைச் செயலாளர் சாகுல் அமீது தலைமை வகித்தார்.
தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ.சி. தேவேந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் என். இளையராஜா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் திருஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் சேட்டு குமார், ஒன்றிய விவசாய அணி செயலாளர் வேங்கன், அவைத்தலைவர் கே ஆர் .சுப்ரமணி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கிருஷ்ணன், எம்ஜிஆர் .கண்ணன், பழனியப்பன், முருகேசன், மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் வைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
Advertisement
அதனைத் தொடர்ந்து மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் என். இளையராஜா அன்னதான முகாமை தொடங்கி வைத்தார். இதில் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.