தமிழ்நாடு

திருச்சுழி ஒன்றிய கிராமங்களில் மத்தியக் குழு ஆய்வு

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் கீழ்க்குடி, செங்குளம் உள்ளிட்ட கிராமங்களில்  வியாழக்கிழமை மத்தியக் குழுவினர் நேரில் வந்து ஆய்வில் ஈடுபட்டு பயிர்ச்சேதம் குறித்து கணக்கீடு செய்தனர்.

திருச்சுழி ஒன்றியம் ம.ரெட்டியபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கிராமங்களில் மொத்தம் 5298 ஹெக்டேர் பரப்பளவில் கடந்த பருவத்தில் பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. இவற்றில் மழையால் சேதமானவை நெற்பயிர்கள் 1567 ஹெக்டேரும், சிறு தானியங்கள் 1284 ஹெக்டேரும், பயறு வகைகள் 572 ஹெக்டேரும், எண்ணெய் வித்துக்கள் 255 ஹெக்டேரும், என மொத்தம் 3679 ஹெக்டேர் அளவிற்கு தொடர் மழையால் சேதமடைந்தன.

இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை முன்னிட்டு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையர்  ஜெகநாதன் தலைமையில் தில்லி உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் அசுதோஷ் அக்னிகோத்ரி, ஹைதராபாத்தில் உள்ள மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் எண்ணெய்வித்து வளர்ச்சி இயக்குனர் மனோகரன் ஆகியோர்  இணைந்து திருச்சுழி ஒன்றியம் ம.ரெட்டியபட்டி அருகே உள்ள செங்குளம், கீழ்க்குடி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களையும் பயிர்களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அப்பகுதி விவசாயிகள் தாங்கள் பயிரிட்டு மழையால் சேமடைந்த நெல், சிறுதானிய பயிர்கள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்கள் சேதம் குறித்தும், வெங்காயம், மிளகாய், மல்லி பாதிப்பு குறித்தும் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

மேலும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மத்திய குழுவினரிடம் விவசாயிகள் கோரிக்கை எழுப்பினர்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், மாவட்ட வேளாண் இணை இயக்குனர் உத்தண்ட ராமன் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். இதனிடையே கள ஆய்வில் ஈடுபட்ட மத்தியக் குழுவினருக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆய்வுக்கு அழைப்பு வந்ததால் மறவர் பெருங்குடியில் கள ஆய்வு மேற்கொள்ளாது கிளம்பிச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேதார்நாத் யாத்திரை: முதல் நாளில் 29,000 பக்தர்கள் தரிசனம்

கேகேஆர் பேட்டிங்; ஓவர்கள் குறைப்பு!

தொழில்நுட்பத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்: அண்ணா பல்கலை. துணைவேந்தா்

15-இல் வேலூரில் கல்லூரி கனவு உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட ஓஆா்எஸ் கரைசல் வழங்க ஏற்பாடு: காஞ்சிபுரம் ஆட்சியா்

SCROLL FOR NEXT