முகப்பு
தமிழ்நாடு

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி: பள்ளிக்கல்வித் துறை பதிலளிக்க உத்தரவு

2017-2018 ம் ஆண்டு பயின்ற மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவச மடிக்கணினி வழங்க உத்தரவிட கோரிய வழக்கில் பள்ளிகல்வி துறை இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இளைஞர் மரணம் அடைந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
பகிர்:

2017-2018 ம் ஆண்டு பயின்ற மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவச மடிக்கணினி வழங்க உத்தரவிட கோரிய வழக்கில் பள்ளிகல்வி துறை இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த காவுதீன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பதில் மனுவில்,

அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு  தமிழக அரசு இலவச மடிக்கணினி  திட்டத்தின் கீழ் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. 

இதற்காக தமிழக அரசு சுமார் 912 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து 9.12 லட்சம் இலவச மடிக்கணினி வாங்கப்பட்டது. இலவச மடிக்கணினியை பயன்படுத்தி பல அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றி வருகின்றனர். 

இதனிடையே கடந்த 2017-2018-ம் ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவச மடிக்கணினி இது வரையில் வழங்க வில்லை. இதையடுத்து 2020-ம் ஆண்டு வெளியிட்ட அரசாணையில் 2018-2019-ம் ஆண்டு முதல் 2020- 2021-ம் ஆண்டு வரை பயின்ற மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க உத்தரவிடபட்டது.

ஆனால் 2017-2018-ம் ஆண்டு பயின்ற மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கவில்லை. இதனால் மாணவர்கள் கரோனா காலத்தில் இணையதளம் மூலம் வகுப்பு பயில மற்றும் தேர்வு எழுத மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.

எனவே 2017-2018 ம் ஆண்டு பயின்ற மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவச மடிக்கணினி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு  குறித்து பள்ளி கல்வித் துறை மற்றும் சிறப்பு திட்ட செயல்படுத்தல்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 4-ம் தேதி ஒத்திவைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →