சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் 200-க்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு
சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 200-க்கும் கீழ் குறைந்துள்ளது.
சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 200-க்கும் கீழ் குறைந்துள்ளது.
அதிலும், 8 மண்டலங்களில் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் உள்ளனர். 7 மண்டலங்களில் 30 முதல் அதிகபட்சமாக 92 நோயாளிகள் வரை சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதையும் படிக்கலாமே.. மாரடைப்பால் துடித்தவரை சாதுர்யமாக காப்பாற்றிய செல்ல நாய்
சென்னையில் இதுவரை கரோனா பாதித்த 2,31,855 பேரில் 2,26,172 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர். 4,111 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் 1,572 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.