விவசாய சங்கத்தினர் சாலை மறியல் 
தமிழ்நாடு

நெல்லையில் விவசாய சங்கத்தினர் சாலை மறியல்: 20 பேர் கைது

திருநெல்வேலி வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் விவசாய சங்கத்தினர் சனிக்கிழமை நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் விவசாய சங்கத்தினர் சனிக்கிழமை நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக்கோரியும், புது தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருநெல்வேலி வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் என்.எஸ்.கணேசன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சுடலை ராஜ், காங்கிரஸ் கமிட்டி மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

இதில், புது தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராஜகுரு, பாப்பாக்குடி ஒன்றியத் தலைவர் மாரி செல்வம், திருநெல்வேலி வட்டத்தலைவர் மணிசுடலை, மாவட்டக்குழு உறுப்பினர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக போராட்டத்தில் பங்கேற்ற 20 பேரை  காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT