முகப்பு
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் இன்று தடையை மீறி ஏர்கலப்பை பேரணி நடத்திய விவசாயிகள் 100 பேர் கைது
தமிழ்நாடு

வேளாண் சட்டம்: திருச்சியில் பேரணி நடத்திய விவசாயிகள் 100 பேர் கைது

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் இன்று தடையை மீறி ஏர்கலப்பை பேரணி நடத்திய 100 விவசாயிகள் கைது 

தமிழ்நாடு

வேளாண் சட்டம்: திருச்சியில் பேரணி நடத்திய விவசாயிகள் 100 பேர் கைது

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் இன்று தடையை மீறி ஏர்கலப்பை பேரணி நடத்திய 100 விவசாயிகள் கைது 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் இன்று தடையை மீறி ஏர்கலப்பை பேரணி நடத்திய விவசாயிகள் 100 பேர் கைது
பகிர்:

திருச்சி: புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திருச்சியில் இன்று தடையை மீறி ஏர்கலப்பை பேரணி நடத்திய விவசாயிகள் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் இன்று (பிப்.6) மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருச்சியில் இன்று பிற்பகல் ஏர்கலப்பை பேரணி நடைபெற்றது.

சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி- கரூர் புறவழிச்சாலையில் ஏர் கலப்பையுடன் பேரணியாக வந்து மறியலில் ஈடுபட்டனர்.

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்‌. இந்த சம்பவத்தால் திருச்சி, கரூர் புறவழிச்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

முழு கட்டுரையைப் படிக்க →