அவிநாசி: சாலையில் கண்டெடுத்த ரூ.10,000-ஐ காவல்நிலையத்தில் ஒப்படைத்த சரக்கு வாகன ஓட்டுநர்
அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் கீழே தவறவிட்ட ரூ.10 ஆயிரம் பணக்கட்டைச் சரக்கு வாகன ஓட்டுநர் அவிநாசி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஒப்படைத்தார்.
அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் கீழே தவறவிட்ட ரூ.10 ஆயிரம் பணக்கட்டைச் சரக்கு வாகன ஓட்டுநர் அவிநாசி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஒப்படைத்தார்.
அவிநாசி சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (48). சரக்கு ஆட்டோ ஓட்டுநரான இவர் திங்கள்கிழமை காலை அவிநாசி வடக்கு ரத வீதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இவருக்கு முன்னால், இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ரூ.10,000 பணக்கட்டைக் கீழே தவறவிட்டுச் சென்றுள்ளார்.
அதைக் கவனித்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரமோகன், பணத்தை எடுத்து உடனே இருசக்கர வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். இருப்பினும் இருசக்கர வாகன ஓட்டுநர் வேகமாகச் சென்றுவிட்டாராம் இதையடுத்து சந்திரமோகன், கீழே விழுந்து கிடந்த ரூ.10 ஆயிரத்தை அவிநாசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். கீழே தவறவிட்டுச் சென்ற ரூ.10 ஆயிரத்தைக் காவல்நிலையத்தில் ஒப்படைத்த சந்திரமோகனுக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.