முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:29 PM
Gold prices rise by Rs 560 per ounce
பகிர்:


சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த வாரத்தில் தங்கம் விலை குறைந்து வந்தது. 

இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.70 உயர்ந்து, ரூ.36,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து, ரூ.4,535 ஆக உள்ளது.

அதே நேரத்தில், வெள்ளி கிராமுக்கு 1.60 பைசா உயா்ந்து, ரூ.75.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,600 உயா்ந்து, ரூ.75,200 ஆகவும் விற்கப்படுகிறது. 

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,535

1 சவரன் தங்கம்...............................36,280

1 கிராம் வெள்ளி.............................75.20

1 கிலோ வெள்ளி............................75,200

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,465

1 சவரன் தங்கம்...............................35,720

1 கிராம் வெள்ளி.............................73.60

1 கிலோ வெள்ளி.............................73,600
 

முழு கட்டுரையைப் படிக்க →