முகப்பு
தமிழ்நாடு

வழக்குரைஞர் தேர்தலில் பணம், மது பாய்ந்தோடுகிறது: நீதிமன்றம்

வழக்குரைஞர் சங்கத் தேர்தலில் பணமும் மதுவும் பாய்ந்தோடுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:29 PM
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

வழக்குரைஞர் சங்கத் தேர்தலில் பணமும் மதுவும் பாய்ந்தோடுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது..

சேலம் வழக்குரைஞர் சங்க தேர்தலுக்கு சிறப்புக் குழுவை நியமித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், பொங்கியப்பன் அமர்வு, சட்டமன்ற தேர்தல்களுக்கும், வழக்குரைஞர் சங்கத் தேர்தல்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என கருத்து தெரிவித்தனர்.

வழக்குரைஞர்கள் மதுவிற்கு தங்களை விற்பதாகவும், வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகவும், மிரட்டுவதாகவும் நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.

ஏப்ரலுக்குள் சேலம் வழக்குரைஞர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியை நியமித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →