சசிகலாவின் உடல்நலம் குறித்து விசாரித்த ரஜினிகாந்த்!
சசிகலாவின் உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று போனில் தன்னிடம் விசாரித்ததாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் உடல்நலம் குறித்து தொலைபேசி மூலமாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று தன்னிடம் விசாரித்ததாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சிறைவாசம் முடிந்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று சென்னை வந்தார் சசிகலா. வழி நெடுகிலும் அவருக்குத் தொண்டர்கள் சார்பில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்பின்னர் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,
சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. அதிமுக பொதுக்குழுவை கூட்டவோ, கட்சியிலிருந்து ஒருவரை நீக்கவோ பொதுச்செயலாளருக்குத்தான் அதிகாரம் உள்ளது. கட்சி உறுப்பினர் அட்டை வழங்கும் அதிகாரமும் பொதுச் செயலாளருக்குத்தான் உள்ளது.
மேலும் இங்கு ஸ்லீப்பர்செல் எம்.எல்.ஏ.வாகத்தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை, அதிமுக நிர்வாகியாகக் கூட இருக்கலாம்.
சசிகலா உடல்நலம் குறித்து பலர் நலம் விசாரித்தார்கள். ஒரு அமைச்சரும், எம்.எல்.ஏவும் கூட நலம் விசாரித்தார்கள். அவர்கள் பெயரைச் சொன்னால் பிரச்னை ஏற்படும். ஆனால், ரஜினிகாந்த் எனது நண்பர். அவர் பெயரைச் சொல்லலாம் என்றார்.
ஆர்.கே.நகர் மற்றும் தேனியில் ஒரு தொகுதி என சட்டப்பேரவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன் என்றும் தெரிவித்தார்.