முகப்பு
தமிழ்நாடு

மலைவாழ் மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்: கனிமொழி

உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் இன்று திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி பரப்புரை மேற்கொண்டார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:29 PM
மலைவாழ் மக்களிடையே பேசுகிறார் கனிமொழி எம்பி
பகிர்:

உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் இன்று திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி பரப்புரை மேற்கொண்டார். 

இதில் நெசவாளர்கள், தொழிலாளிகள் மலைவாழ் மக்கள் விவசாயிகள் என பல்வேறு தரப்பினர் இடையே கனிமொழி கலந்துரையாடினார். இந்நிலையில் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி மலையில் மலைவாழ் மக்களைச் சந்தித்துப் பேசினார். 

அப்போது மலைவாழ் மக்களுக்குத் தேவையான பட்டா குடிநீர் வசதி சாலை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து உடுமலை நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கனிமொழி பேசுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.