நாகையில் சாலை மறியல்: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 23 பேர் கைது
நாகையில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 23 பேரை போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர்.
நாகப்பட்டினம்: நாகையில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 23 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
மத்திய அரசு இயற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தில்லி எல்லையில் கடந்த 70 நாள்களுக்கு மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவுத் தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய காங்கிரஸ் கட்சியினர், நாகை பொது அலுவலக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்ட ஒரு பெண் உள்ளிட்ட 23 பேரை கைது செய்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் நாகை மாவட்டத் தலைவர் ஆர்.என். அமிர்த ராஜா தலைமை வகித்தார். நாகூர் நகரத் தலைவர் அப்துல் காதர், கீழ்வேளூர் வட்டாரத் தலைவர் ஜி. கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுபான்மைத் துறை மாவட்டத் தலைவர் என். முஹம்மது ரபீக், மாவட்டச் செயலாளர் நிலோபர் பேகம், மாவட்டத் துணைத் தலைவர் முஹம்மது ரியாஸ், பொதுச் செயலாளர் எம். ஜி. ஜலாலுதீன் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.