சிவகாசி பொறியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் 32 ஆவது சாலைப் பாதுகாப்பு மாத விழாவினையொட்டி சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் 32 ஆவது சாலைப் பாதுகாப்பு மாத விழாவினையொட்டி சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சியை தாளாளர் சோலைசாமி தொடங்கி வைத்தார். அரசுப் போக்குவரத்து பயிற்சி வாகனத்தில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியில் சாலை விதிமுறைகள், சாலை குறியீடுகள் உள்ளிட்டவை விளக்கப்பட்டிருந்தது.
இந்தக் கண்காட்சியை கல்லூரி மாணவ,மாணவிகள் பார்வையிட்டனர். தொடர்ந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரைப் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தாளாளர் சோலைசாமி பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பிஜி விஷ்ணுராம் மாரிசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசுப் போக்குவரத்து கழக கிளை மேலாளர் கி.தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளர் துர்க்கை ஈஸ்வரன் செய்திருந்தார்.