முகப்பு
தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கிருஷ்ணகிரியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலரைக் கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 10 பிப்ரவரி, 2021 at 1:33 PM
கிருஷ்ணகிரியில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:59 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலரைக் கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி வருவாய்க் கோட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணியிட மாறுதல்களில் குளறுபடியை ஏற்படுத்தும் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் கற்பகவல்லியைக் கண்டித்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில்  கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெறும் இந்தப் போராட்டத்திற்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.