தமிழ்நாடு

சென்னையில் குப்பைகளை அகற்ற சிட்டிசன் செயலி அறிமுகம்

DIN


சென்னை: சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட 7 மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் குப்பைகள் இருக்கும் இடத்தை புகைப்படம் எடுத்து அனுப்பினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் சிட்டிசன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உர்பேசர் ஸ்மித் நிறுவனத்தின் சிட்டிசன் செயலியின் பயன்பாட்டினை சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ. பிரகாஷ் இன்று ரிப்பன் மாளிகையில் துவக்கி வைத்தார்.

அதன்படி, சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில், முதற்கட்டமாக 7 மண்டலங்களில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது. அந்த வகையில், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 7 மண்டலங்களில் இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குக் வித் கோமாளிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT