அரசுப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், மறியல்: 120 பேர் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பணியாளர் சங்கத்தினர் 120 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கடலூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பணியாளர் சங்கத்தினர் 120 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அரசுப் பணியாளர்களுக்கு 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு டிஎன்சிஎஸ்சிக்கு இணையான ஊதியம் மற்றும் தனித்துறை அமைக்க வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 25 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் மறியல் போராட்டம் அறிவித்தனர்.
அதன்படி, கடலூரில். மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் கு.சரவணன் தலைமையில் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலைமறியல் ஈடுபட்டனர். இதனையடுத்து 50 பெண்கள் உள்பட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.