தமிழ்நாடு

தோரணமலை முருகன் கோவிலில் விவசாயம் செழிக்க வேண்டி வருண கலச பூஜை 

DIN

பாவூர்சத்திரம் : தோரணமலை முருகன் கோவிலில் விவசாயம் செழிக்க வேண்டி வருண கலச பூஜை நடைபெற்றது.

தென்காசி-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில் தை மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி விவசாயம் தழைக்க வேண்டி வருண கலச பூஜை வெள்ளிக்கிழமை (பிப்.12)  நடைபெற்றது. 

விவசாயம் தழைக்க வேண்டி மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வரும் முருக பக்தர்கள்.

இதற்காக முருக பக்தர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கு சிறப்பு அபிசேகம், தீபாராதனை நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் தலைமையில் செய்து இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொப்பூா் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

பென்னாகரத்தில் இடியுடன் கூடிய கனமழை

வாகன புகைப் பரிசோதனை மையங்களில் வழிமுறைகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை

காவிரி ஆற்றில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியா் பலி

SCROLL FOR NEXT