முகப்பு
தமிழ்நாடு

நெல்லை அருகே இளைஞர் கொலை

திருநெல்வேலி அருகே உள்ள மானூர் காட்டுப்பகுதியில் உடலில் காயங்களுடன் கொலைசெய்யப்பட்டுக் கிடந்த இளைஞர் உடலை போலீசார் சனிக்கிழமை மீட்டனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:31 PM
சம்பவ இடத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் ஆய்வு
பகிர்:


திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே உள்ள மானூர் காட்டுப்பகுதியில் உடலில் காயங்களுடன் கொலைசெய்யப்பட்டுக் கிடந்த இளைஞர் உடலை போலீசார் சனிக்கிழமை மீட்டனர். 

திருநெல்வேலி அருகே உள்ள மானூர் காட்டுப்பகுதியில் இளைஞர் ஒருவர் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக மானூர் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொலைசெய்யப்பட்டுக் கிடந்த இளைஞர் அஜித்

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் தச்சநல்லூர் அருகே உள்ள சத்திரம் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் அஜித்(32) என்பது தெரியவந்தது. இவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

மேலும், இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் ஆய்வாளர் நெ.மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →