தமிழ்நாடு

சென்னை மக்களின் அன்பான வரவேற்பால் மகிழ்ச்சி: பிரதமர்

DIN

சென்னை மக்களின் அன்பான வரவேற்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.14) காலை சென்னைக்கு வருகை புரிந்தார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காணொலி வாயிலாக பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கி வைத்து பின்னர் கொச்சிக்குப் புறப்பட்டார்.

அப்போது அவர், சென்னை மக்களின் அன்பான வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், பாதுகாப்புத் துறையில் சுயசார்பு பயணத்தில் இது ஒரு சிறப்பு நாள்.

சென்னை ஆவடியில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் மாக் 1-ஏ ராணுவ பீரங்கி ராணுவத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டது. தமிழகத்தில் உருவாக்கப்பட்ட பீரங்கி நாட்டின் எல்லைகளை காப்பாற்றும் என்று பதிவிட்டுள்ளார்.

நாட்டுக்கு மோடி அர்ப்பணித்த அர்ஜூன் மாக் 1 ஏ பீரங்கி 71 புதிய வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT