சென்னையில் கரோனா சிகிச்சையில் 1,559 பேர்: மண்டலவாரியாக விவரம்
கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் தற்போது 1,559 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் தற்போது 1,559 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் கரோனா பாதிப்பு விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இதுவரை 2,33,334 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 4,123 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 2,27,652 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 1,559 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கரோனா சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தோர் மற்றும் உயிரிழந்தோர் விவரங்களையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தற்போது அதிகபட்சமாக அண்ணா நகரில் 171 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7 மண்டலங்களில் 100க்கு மேற்பட்டோரும், 8 மண்டலங்களில் 100க்கும் குறைவானோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.