தூத்துக்குடியில் சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 5 பெண்கள் பலி
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 5 பெண்கள் பலியாகினர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 5 பெண்கள் பலியாகினர்.
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் களை பறிக்க காட்டு வேலைக்கு விவசாய கூலித் தொழிலாளர்களை அழைத்துச் சென்ற குட்டியானை எனப்படும் சிறிய வகை சரக்கு வாகனம் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தில் மணக்காடு - மணப்படை ஊரைச் சேர்ந்த 5 பெண்கள் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
உயிரிழந்தவர்கள் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மணியாச்சி காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமண கொழுந்துபுரம் கிராமத்திலிருந்து மணியாச்சி கிராமத்திற்கு விவசாயக் கூலி வேலை செய்வதற்காக குட்டி யானையில் வந்த நபர்கள் வாகனம் நிலை தடுமாறி அருகில் இருந்த கண்மாய்க்குள் விழுந்ததில் ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் தற்போது ஆறு நபர்கள் சிகிச்சையில் உள்ளார்கள்.
அவர்களது விவரம்..
திருமண கொழுந்து புரத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் (65) கணவர் பெயர் சுப்பிரமணியன், செல்லத்தாய் (60) கணவர் பெயர் சுந்தர தேவர், மாரியம்மாள், லிங்கம்மாள் (35) கணவர் பெயர் மகாராஜன், பேச்சியம்மாள் (30) கணவர் பெயர் மகாராஜன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திருமலை கொழுந்து புரம் (மணக்காடு) பகுதியைச் சேர்ந்த விழி (36) கணவர் பெயர் மணிகண்டன் என்ற பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் தற்போது ஒட்டபிடாரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.