ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து மோட்டார் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மோட்டார் சங்கங்கள் சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மோட்டார் சங்கங்கள் சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
15 ஆண்டு முடிந்த வாகனத்தை கண்டவுடன் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வேண்டும். மோட்டார் வாகன இன்சூரன்ஸ் கட்டணத்தை உயர்த்தக்கூடாது. மோட்டார் நலச்சட்டத்தை திருத்தக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு அனைத்து மோட்டார் சங்கத்தினர் கோஷமிட்டனர்.
சாலைப் போக்குவரத்து சிஐடியூ சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் கண்ணன் தலைமை வகித்தார். செட்டியார்பட்டி சங்கத் தலைவர் சேவுக பாண்டியன்,சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் மாரியப்பன், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் திருமலை ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
சாலைப் போக்குவரத்து சங்க மாவட்டத் தலைவர் கணேசன் தளவாய்புரம் சங்கத் தலைவர் சபரி, முறம்பு சங்கத்தலைவர் இசக்கி பாண்டியன், சத்திரப்பட்டி சங்கத்தலைவர் பாலு, ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கத் தலைவர்கள் பழனி காமாட்சி நான்கு சக்கர வாகன பழுது பார்ப்போர் நலச் சங்க மாநில பிரதிநிதி ராமகிருஷ்ணன், சிஐடியு முன்னாள் தலைவர்கள் மாரியப்பன், சசிகுமார், ஜெயக்குமார்,சிஐடியூ நிர்வாகி வீர சதானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.