முகப்பு
தமிழ்நாடு

புதுவை முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:33 PM
புதுச்சேரி முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
பகிர்:

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். 

புதுச்சேரி ராஜ்நிவாஸில் துணைநிலை ஆளுநரின், செயலர் தேவநீதிதாசை எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன் பாஜக தலைவரும், எம்எல்ஏவுமான சாமிநாதன் ஆகியோர் புதன்கிழமை நேரில் சந்தித்து முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

அதன்பின்னர் ஆளுநர் மாளிகை முன்பு செய்தியாளரிடம் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி கூறும்போது, 

முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எங்களுடைய 14 எம்எல்ஏக்கள் கையெழுத்துடன் மனுவாகக் கொடுத்துள்ளோம்’ என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →