தமிழ்நாடு

மதுராந்தகம் ஏரியைத் தூர் வார ரூ.120 கோடி: அரசாணை

DIN

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரியைத் தூர் வார 120.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியின் மூலம் கரையை பலப்படுத்துதல், ஏரியை ஆழப்படுத்துதல், வரத்து கால்வாய் மற்றும் உபரி கால்வயை தூர் வாருதல் உள்ளிட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மதுராந்தகம் ஏரியின் அருகே 1,650 மீட்டர் நீளத்திற்கு புதிய தடுப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் செய்யப்படும்.

தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி மூலம் சுற்றுப்புறப் பகுதிகளிலுள்ள 7,604 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்!

அட்சய திருதியில் தங்கம் மட்டுமல்ல..இதையும் வாங்கலாம்!

இரண்டு தோற்றங்களில் நடிக்கும் அதர்வா, நிமிஷா!

முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை

10 ஆம் வகுப்பு தேர்வு: திருநெல்வேலி மாவட்டத்தில் 93.04% தேர்ச்சி!

SCROLL FOR NEXT