அதிமுக பொதுக் குழு முடிவை எதிர்த்து சசிகலா நீதிமன்றத்தில் முறையீடு
அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து 2017-இல் தொடங்கப்பட்ட வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரி சசிகலா சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து 2017-இல் தொடங்கப்பட்ட வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரி சசிகலா சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலாவின் மனுவை நீதிமன்றம் மார்ச் 15-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக, 2017-இல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டிய கட்சியின் பொதுக் குழுக் கூட்டமும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது என மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் சசிகலா அவசர வழக்கைத் தொடர்ந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.