தமிழ்நாடு

திருப்போரூர் கந்தசாமி கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்போரூர் அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை ஶ்ரீகந்தசுவாமி திருக்கோவிலில்  பிரம்மோற்சவம் பெருவிழா கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது. 

DIN

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சியில் சென்னை செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள சுயம்புமூர்த்தியான அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை ஶ்ரீகந்தசுவாமி திருக்கோவிலில் நடைபெறவுள்ள பிரமோற்சவ பெருவிழாவிற்கான கொடியேற்றம் புதன்கிழமை கோவிலின் கொடிமரத்தில் நடைபெற்றது. 

விழாவையொட்டி விக்னேஸ்வர பூஜை கொடி மரத்திற்கு பூஜைகள் நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெற்று. கொடிமரத்தின் முன்பு வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் எழுந்தருளி கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. 13 நாள்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ பெருவிழாவில் மாலை கிளி வாகன உற்சவம் வியாழக்கிழமை பதினெட்டாம் தேதி காலை தொட்டி உற்சவம் மாலை புது வாகன உற்சவம் 19ஆம் தேதி புருஷாமிருகம் உபதேச உற்சவம் மாலை வெள்ளி அன்ன வாகனம் 20 ஆட்டுக்கடா வாகன உற்சவம், மாலை வெள்ளி மயில் வாகனம் 21ஆம் தேதி காலை மங்களகிரி உற்சவம், மாலை தங்க மயில் வாகனம் பஞ்சமூர்த்தி புறப்பாடும், 

22ஆம் தேதி காலை தொட்டி உற்சவம் யானை வாகனம் உற்சவம், 23ஆம் தேதி ரதோற்சவம் தேரோட்டம் மாலை மங்களாசாசன உற்சவம் 24ஆம் தேதி தொட்டி உற்சவம், மாலை பரிவேட்டை இரவு குதிரை வாகனம் 25ஆம் தேதி காலை விமான உற்சவம் மாலை சிம்ம வாகனம் ஆறுமுக சுவாமி அபிஷேகம் மற்றும் உற்சவம்26 ஆம் தேதி நண்பகல் தீர்த்தவாரி தொட்டி உற்சவம் மாலை 7 மணிக்கு மேல் தெப்போற்சவம் இரவு குதிரை வாகனம் மத்தியில் அவரோகணம் மௌன உற்சவம் சண்டிகேஸ்வரர் உற்சவம் 27ஆம் தேதி மாலை கிரிவலம் உற்சவம் பந்தம் பரி உற்சவம், 28ஆம் தேதி மாலை வேடபரி பிரபல உற்சவம் மார்ச் 1ஆம் தேதி காலை திருக்கல்யாண மயில்வாகனம் உற்சவம் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினரும் அஇஅதிமுக அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற இச்செயலாளருமான தண்டரை கே.மனோகரன், மாவட்ட மகளிரணி செயலாளர் மரகதம் குமரவேல் ஒன்றிய செயலாளர் குமரவேல், திருப்போரூர் சட்ட மன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், மதிமுக கட்சியின் திருப்போரூர் வடக்கு ஓன்றியச்செயலாளர் பிலோகு உள்ளிட்டோர், பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். 

இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலர் எம். சக்திவேல் , தக்கார் மற்றும் உதவி ஆணையர் பெ.க.கவெனிதா, மேலாளர் வெற்றி உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பதவிப் பறிப்பு - வேதனையில்லை! மகிழ்ச்சிதான்: செங்கோட்டையன் | செய்திகள்: சில வரிகளில் | 06.09.25

காஸா மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை! கைப்பற்றும் நடவடிக்கையா?

குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

Coolie முதல் Lokah வரை! Cinema updates! | Dinamani Talkies | Simbu | Vetrimaran | Prithviraj | Alia

பிரிட்டனின் முதல் முஸ்லிம் பெண் உள்துறை அமைச்சர்! யார் இந்த ஷபானா மஹ்மூத்?

SCROLL FOR NEXT