தமிழகத்தில் இன்று புதிதாக 457 பேருக்கு கரோனா
தமிழகத்தில் இன்று புதிதாக 457 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 457 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெயிட்ட தகவலில், மாநிலத்தில் இன்று 51,101 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் புதிதாக 457 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 138 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கரோனா தொற்றிலிருந்து மேலும் 470 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8,30,320-ஆக உள்ளது.
தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 4,173 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே, கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 6 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,444-ஆக உயா்ந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.