முகப்பு
தமிழ்நாடு

மத்திய அரசு இட ஒதுக்கீட்டில் எம்.டெக். படிப்பு: நீதிமன்றம்

எம்.டெக். படிப்புகளுக்கு மத்திய அரசு இட ஒதுக்கீட்டை பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:34 PM
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில்  ரத்து செய்யப்பட்ட இரண்டு எம்.டெக் படிப்புகளுக்கு மத்திய அரசு இட ஒதுக்கீட்டை பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ,எம்.டெக். பயோ டெக்னாலஜி, எம்.டெக். கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய முதுகலை படிப்புகளுக்கு, தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில், மத்திய அரசின் 49.5சதவீத இட ஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற நிர்பந்தித்ததால்,  2020-2021-ஆம் ஆண்டில் இரு மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இல்லை என  அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த முடிவு சட்ட விரோதமானது. எனவே, இந்த 2 முதுகலை படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கையை ரத்து செய்து அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இந்த படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும் என வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மாணவர்களின் நலன் சம்மந்தப்பட்ட இந்த விவகாரத்தில் எவ்வாறு தீர்வு காணப்போகிறீர்கள் எனவும், இந்த இரண்டு படிப்புகளை பல்கலைக்கழகம்  தொடர்ந்து நடத்த என்ன செய்வது என கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி விசாரணைக்கு வந்தது. அப்போது 
அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் மத்திய அரசின் 49.5சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தி கொள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தரப்பில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு மத்திய அரசின் 49.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில்  மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →