முகப்பு
தமிழ்நாடு

ஊழல் அமைச்சர்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுப்பார்: துரைமுருகன்

ஊழல் செய்த அமைச்சர்கள் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நடவடிக்கை எடுப்பார் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:34 PM
ஆளுநரை சந்தித்த திமுகவினர்
பகிர்:


ஊழல் செய்த அமைச்சர்கள் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நடவடிக்கை எடுப்பார் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 
அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரின் 2-வது பட்டியலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் திமுக நிர்வாகிகள் வழங்கினர்.

ஆளுநருடனான சந்திப்பின்போது பொதுச்செயலாளர் துரைமுருகனுடன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர். 

அதிமுக அமைச்சர்கள் மீது தாங்கள் அளித்துள்ள ஊழல் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவினர் ஆளுநரிடம் வலியுறுத்தினர்.

ஆளுநரை சந்தித்த பிறகு துரைமுருகன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், ஊழல் செய்த அமைச்சர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்ததாகக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.