கெங்கவல்லி ஒன்றியத்தில் தீக்‌ஷா செயலி மூலம் தமிழ் மொழித்திறனை வளர்த்தல் குறித்த பயிற்சியை சேலம் டயட் விரிவுரையாளர்கள் வழங்கினார்கள்.  
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் முதன் முறையாக 11 மாதங்களுக்கு பின்னர் ஆசிரியர்களுக்கு நேரிடை பயிற்சி

தமிழகத்தில் கரோனா துவங்கிய பின்னர் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஆசிரியர்களுக்கு 17.8.20 முதல் பள்ளிப் பணிகளுக்கு திரும்பினர்.

DIN


தம்மம்பட்டி: தமிழகத்தில் கரோனா துவங்கிய பின்னர் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஆசிரியர்களுக்கு 17.8.20 முதல் பள்ளிப் பணிகளுக்கு திரும்பினர். இருப்பினும் அனைத்து வகை, அரசு ஆசிரியர்களுக்கும் இணையம் வழி, ஜும் , கூகுள் மீட்டிங்  செயலிகள் மூலமாகவே, அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், தமிழகத்தில் முதன் முறையாக தீக்‌ஷா செயலி என்ற கல்வி சார்ந்த செயலியின் நடைமுறை இடர்பாடுகளை நீக்க ஆசிரியர்கள் தீக்‌ஷா செயலியின் தெளிவு பெற கெங்கவல்லி ஒன்றியத்தில் கரோனா வழிகாட்டுதல்களுடன் நடத்த முடிவெடுக்கப்பட்டது. 

அதன்படி, சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியத்தில் சேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள மாவட்ட அரசினர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (டயட்) சார்பாக செயல் ஆராய்ச்சி பற்றிய  ஒருநாள் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தீக்‌ஷா செயலி மூலம் தமிழ் மொழித்திறனை வளர்த்தல் குறித்த பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்கள்.

பயிற்சியை சேலம் டயட் விரிவுரையாளர் கலைவாணன் மற்றும் கெங்கவல்லி ஒன்றிய எமிஸ் ஓருங்கிணைப்பாளர், ஆசிரியர் சரவணன் ஆகியோர்  தீக்‌ஷா செயலி மூலம் தமிழ் மொழித்திறனை வளர்த்தல் குறித்த பயிற்சியை வழங்கினார்கள். 

இப்பயிற்சியில் கெங்கவல்லி ஒன்றியத்தை சேர்ந்த 25 ஆசிரியர்கள் பங்கு பெற்றனர். பயிற்சியில் பங்கேற்ற அனைத்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களும் கைபேசிகளுடன் பங்கேற்று கற்றல் கற்பித்தலுக்கு பயன்படும் செயலிகளை பதிவிறக்கம் செய்து கொண்டனர். முடிவில் கடம்பூர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் செல்வம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT