முகப்பு
தமிழ்நாடு

பல்லடத்தில் உலக தாய் மொழி தினம் கவியரங்கம்

உலக தாய் மொழி தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ழகரம் அமைப்பு, பல்லடம் தமிழ்ச் சங்கம், பல்லடம் அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை ஆகியவை சார்பில் கவிதை திருவிழா பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:35 PM
உலக தாய் மொழி தினத்தையொட்டி பல்லடத்தில் ழகரம் அமைப்பு, பல்லடம் தமிழ்ச் சங்கம், பல்லடம் அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை ஆகியவை சார்பில் கவிதை திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை பேசுகிறார்  கவிஞர் மு.வ.பாலாஜி.
பகிர்:

பல்லடம்: உலக தாய் மொழி தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ழகரம் அமைப்பு, பல்லடம் தமிழ்ச் சங்கம், பல்லடம் அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை ஆகியவை சார்பில் கவிதை திருவிழா பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இவ்விழாவிற்கு பல்லடம் தமிழ்ச் சங்க தலைவர் கண்ணையன் தலைமை வகித்தார். கல்லூரி துணை முதல்வர் ஜெயச்சந்திரன், கல்லூரி தமிழ்த் துறை தலைவர் பாலமுருகன்,பேராசிரியர் கமலா, ழகரம் அமைப்பு தலைவர் மருத்துவர் தேவி, செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வரவேற்றனர். 

விழாவில் சென்னை தேடல்களம் அமைப்பு நிறுவனர் சம்பத்குமார், பனப்பாளையம் பாலசுப்பிரமணியம், கோவை வசந்தவாசல் கவிமன்ற துணைத் தலைவர் சண்முகம், கோவை நாவல் ஆச்ரியர் முகில் தினகரன், ழகரம் அமைப்பு நிறுவனர் மகிழ்வேல் பாண்டியன், அருண்கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர். 

கவிஞர்கள் வேல்முருகன்,பாலாஜி,மீனாட்சிசுந்தரம் பங்கேற்ற கவியரங்கரம் நடைபெற்றது. அதைதொடர்ந்து தேவியன் தேன் துளிகள், இனியனின் இனிய இலக்கு, சரவிபியின் விற்கப்படும் விருப்பங்கள், ஞானப்பிரசன்னாவின் கூட்டாஞ்சோறு, சீர்த்தியின் கவிதைகள், மைதிலியின் கவிதைச் சாரல், வழிநகர் ராஜா கருப்புவின் சேதியொன்னு சொல்லப்போறேன் ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 

முடிவில் பல்லடம் தமிழ்ச்சங்க பொருளாளர் கருப்புச்சாமி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.