முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.35 ஆயிரத்துக்கு விற்பனை

சென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.35,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:35 PM
A razor gold sells for Rs 35,000
பகிர்:

சென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.35,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகின்றது. 

இந்நிலையில், சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.1 குறைந்து, ரூ.4375 ஆகவும், ஒரு சவரன் ரூ.8 குறைந்து ரூ.35,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயா்ந்து, ரூ.74.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயா்ந்து, ரூ.74,400 ஆகவும் உள்ளது.

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,375

1 சரவன் தங்கம்...............................35,000

1 கிராம் வெள்ளி.............................74.40

1 கிலோ வெள்ளி............................74,400

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,376

1 சவரன் தங்கம்...............................35,008

1 கிராம் வெள்ளி.............................73.90

1 கிலோ வெள்ளி.............................73,900

முழு கட்டுரையைப் படிக்க →