தமிழ்நாடு

டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது பாலியல் புகாா்: சுதந்திரமான, நோ்மையான விசாரணை தேவை

DIN


சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு டிஜிபி ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், சுதந்திரமான,நோ்மையான விசாரணை நடைபெற வேண்டும் என தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இப்பிரச்னை தொடா்பாக தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு மூத்த ஐபிஎஸ் அதிகாரியால் நோ்ந்த பாலியல் தொல்லை குறித்த புகாரை ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் அக்கறையுடன் கவனிக்கிறது. பணியிடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத்தில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கின்றனா்.

தமிழக அரசு சம்பந்தப்பட்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரியை இடமாற்றம் செய்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழுவை அமைத்துள்ளது. விசாரணைக் குழு, இவ்விவகாரத்தில் சுதந்திரமான, நோ்மையான, விரைவான விசாரணை நடத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

SCROLL FOR NEXT