முகப்பு
அருப்புக்கோட்டையில் பல ஆயிரம் இருசக்கர வாகனங்கள் அணிவகுப்புடன் கூடிய தேர்தல் பரப்புரை
தமிழ்நாடு

அருப்புக்கோட்டை: இருசக்கர வாகனங்களில் திமுக தேர்தல் பரப்புரை

அருப்புக்கோட்டையில் பல ஆயிரம் இருசக்கர வாகனங்கள் அணிவகுப்புடன் கூடிய தேர்தல் பரப்புரைக்கான பேரணியை எம்.எல்.ஏ. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:37 PM
அருப்புக்கோட்டையில் பல ஆயிரம் இருசக்கர வாகனங்கள் அணிவகுப்புடன் கூடிய தேர்தல் பரப்புரை
பகிர்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களின் சிறப்பு அணிவகுப்புடன் கூடிய பேரணி மூலம் திமுக தேர்தல் பரப்புரையானது வெள்ளிக்கிழமை எம்.எல்.ஏ. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரனின் தலைமையில் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை காந்தி நகரில் தொடங்கிய இருசக்கரவாகன அணிவகுப்பு மூலமான தேர்தல் பிரசாரப் பேரணிக்கு எம்.எல்.ஏ. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தலைமை வகித்துக் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ. கே.எம்.விஜயக்குமார்,முன்னாள் நகர்மன்றத்தலைவர் சிவப்பிரகாசம், நகரச் செயலாளர் ஏ.கே.மணி,முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் சுப்பாராஜ், விருதுநகர் மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளர் பாபுஜி, ஒன்றிய செயலாளர்கள் பொன்ராஜ், பாலகணேசன், மாவட்ட வர்த்தகப் பிரிவுச் செயலாளர் முத்துவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இப்பிரசாரப் பேரணியானது, நகரின் முக்கியப் பகுதிகளான வெள்ளைக்கோட்டை, பழைய பேருந்து நிலையம், புளியம்பட்டி, புதிய பேருந்துநிலையம், நெசவாளர் காலணி வழியாக நேரு மைதானத்தில் சென்று நிறைவடைந்தது. அப்போது திமுகவிற்கு வாக்களிக்கக் கோரியும், ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தரப்போராரு ஆகிய முழக்கங்களை இட்டு பேரணியில் கலந்து கொண்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

உடன் நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள் பலரும், திரளான தொண்டர்களும் பேரணியில் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →