மதுரையில் பிப். 18-ல் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் உரையாற்றும் தா. பாண்டியன் (கோப்புப் படம்). 
தமிழ்நாடு

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை (பிப்.26) காலமானார். அவருக்கு வயது 88.

DIN

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை (பிப்.26) காலமானார். அவருக்கு வயது 88.

சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, கடந்த சில ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது.

கடந்த சில நாள்களாக தா.பாண்டியனின் உடல்நிலை மோசமடைந்ததால், புதன்கிழமை அவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செயற்கை சுவாசக் கருவியுடன் தா.பாண்டியனுக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று (பிப்.25) காலை தகவல் வெளியான நிலையில்,  சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.15 மணிக்கு உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

SCROLL FOR NEXT