முகப்பு
மார்ச் 2 முதல் திமுக வேட்பாளர் நேர்காணல்
தமிழ்நாடு

மார்ச் 2 முதல் திமுக வேட்பாளர் நேர்காணல்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் மார்ச் 2-ம் தேதி முதல் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:37 PM
மார்ச் 2 முதல் திமுக வேட்பாளர் நேர்காணல்
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் மார்ச் 2-ம் தேதி முதல் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை நேர்காணல் நடைபெறும்.

தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெறும். நேர்காணலுக்கு வருபவர்கள் ஆதரவாளர்களை அழைத்து வர அனுமதியில்லை. 

மார்ச் 2-ம் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், தேனி மாவட்டத்திற்கு நேர்காணல் நடைபெறும்.

மார்ச் 3-ம் தேதி நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, கிருஷ்ணகிரி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கும், மார்ச் 4-ம் தேதி தருமபுரி, நாமக்கல், சேலம் மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடத்தப்படுகிறது.

மார்ச் 5-ம் தேதி தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், மாவட்டங்களுக்கும், மார்ச் 6-ம் தேதி திருவள்ளூர், சென்னை, புதுச்சேரிக்கு நேர்காணல் நடைபெறும்.

மார்ச் 12-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால் குறுகிய நாள்களில் திமுக வேட்பாளர்களுக்கு நேர்காணல் செய்யப்படவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →