தமிழ்நாடு

போக்குவரத்து தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தொழிலாளர் நல ஆணையம்!

DIN


சென்னை: மூன்றாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு போக்குவரத்து தொழிலாளர்களை இன்று சனிக்கிழமை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது தொழிலாளர் நல ஆணையம்.

ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை முதல் தொமுச, சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கத்தினா் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தொடா்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் சுமாா் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கவில்லை. ஆனால், விரைவுப் போக்குவரத்துக் கழகங்கள், மாநகரப் போக்குவரத்துக் கழகங்களை பொருத்தவரை சுமாா் 45 சதவீதத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கின.

அதே நேரம், தற்காலிக ஓட்டுநா்களைக் கொண்டு பேருந்துகளை இயக்கியதால், ஆங்காங்கே விபத்துகளும் ஏற்படுவதால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். 

இதையடுத்து போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொழிற்சங்கக் கூட்டமைப்பினா்,  இடைக்கால நிவாரணமாக அறிவித்த ரூ.1000 தொகையை, 2019-ஆம் ஆண்டு, செப்.1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியா்களுக்கு அகவிலைப் படி உயா்வு, பணப்பலன் ஆகியவற்றை வழங்க வேண்டும் உள்ளிட்டவற்றை அமைச்சரிடம் வலியுறுத்தினோம். இது தொடா்பாக இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், போராட்டமும் தொடரும் நிலையில், சனிக்கிழமை, தொழிலாளா் நலத்துறையுடன் ஆலோசனை நடத்த உள்ளோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

இந்நிலையில், மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது தொழிலாளர் நல ஆணையம். 

இதையடுத்து தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மாலை 3 மணிக்கு தொழிலாளர் நல ஆணையம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறது. 

போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் தொழிலாளர் நல கூடுதல் ஆணையர் வள்ளலார் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், வேலைநிறுத்தம் தொடா்பாக முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT