முகப்பு
தமிழ்நாடு

தொகுதிப் பங்கீடு: மதிமுக பேச்சுவார்த்தைக் குழு அமைப்பு

சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு பற்றி திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ (கோப்புப்படம்)
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு பற்றி திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி கூட்டணிக் கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. 

அந்தவகையில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

திமுகவில் டி.ஆர். பாலு தலைமையில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. 

அதனைத் தொடர்ந்து அதன் கூட்டணிக் கட்சியான மதிமுகவும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பேச்சுவார்த்தை குழுவை அமைத்துள்ளது. 

மல்லை சத்யா, செந்திலதிபன், கு.சின்னப்பா, அந்திரிதாஸ் ஆகிய நான்கு பேர் கொண்ட குழுவை பொதுச் செயலாளர் வைகோ நியமித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →