தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் ரூ. 159 கோடிக்கு மது விற்பனை
புத்தாண்டையொட்டி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று(வியாழக்கிழமை) ஒரே நாளில் ரூ. 159 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
புத்தாண்டையொட்டி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ. 159 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ. 48.75 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன. கோவை மண்டலத்தில் ரூ. 28.40 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ. 28.10 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ. 27.30 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ. 26.49 கோடி என்ற அளவில் மது விற்பனை நடந்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது .