தமிழ்நாடு

மழைநீர் கடலில் கலப்பதை தடுக்க, நிபுணர் குழு அமைக்கக்  கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

DIN

சென்னை: மழைநீர்  வீணாகக் கடலில் கலப்பதை தடுக்க, நிபுணர் குழுவை அமைக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு  பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சுரேந்திரநாத் கார்த்திக் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னையில் பெரு  வெள்ளத்தால் பாதிப்பு  ஏற்பட்டது. ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகள் குடிநீர்  பிரச்னையும் ஏற்பட்டது. இதற்கு நிலத்தடி நீரை முறையாக சேமிக்காததே காரணம்.  

அண்மையில் பெய்த மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் நேரடியாக கடலுக்குச் சென்று வீணானது. மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நிலத்தடி நீர்  மேலாண்மை  இல்லாதததால், வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அதிகப்படியான  நீரை சேமித்து வைத்து நிலத்தடி நீர் மட்டத்தை  உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிபுணர் குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கு  தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  மனு தொடர்பாக தமிழக அரசு வரும் ஜனவரி 18-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT