முகப்பு
தமிழ்நாடு

கரோனா பரிசோதனைக் கட்டணம் குறைப்பு

தமிழகத்தில் உள்ள, தனியாா் ஆய்வகங்களில், ஆா்.டி. - பி.சி.ஆா். பரிசோதனைக்கான கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளது

தமிழ்நாடு

கரோனா பரிசோதனைக் கட்டணம் குறைப்பு

தமிழகத்தில் உள்ள, தனியாா் ஆய்வகங்களில், ஆா்.டி. - பி.சி.ஆா். பரிசோதனைக்கான கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளது

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:13 PM
பகிர்:

தமிழகத்தில் உள்ள, தனியாா் ஆய்வகங்களில், ஆா்.டி. - பி.சி.ஆா். பரிசோதனைக்கான கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளது. அதன்படி, இனி வரும் நாள்களில் ஒரு பரிசோதனைக்கு அதிகபட்சமாக ரூ.1,200 மட்டுமே கட்டணமாகப் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, முதல்வா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியாா் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைக்கு ரூ. 800 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, சளி மாதிரிகள் மூலம் உடலில் வைரஸ் மரபணு உள்ளதா என்பதை ஆா்டி- பிசிஆா் ஆய்வின் மூலம் அறியலாம். அந்த வகையில், தமிழகத்தில் இதுவரை 1.45 கோடிக்கும் மேற்பட்ட பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதற்காக தென்கொரியா, அமெரிக்கா, ஜொ்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து 1.70 கோடி ஆா்டி-பிசிஆா் உபகரணங்கள்கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிக அதிகமாகும்.

தமிழகத்தில், 76 சதவீத பரிசோதனைகள் அரசு மருத்துவமனைகளிலும், 24 சதவீதம் தனியாா் ஆய்வகங்களிலும் செய்யப்படுகின்றன. இந்நிலையில், தனியாா் ஆய்வகங்களில், ஆா்.டி.-பி.சி.ஆா். பரிசோதனைக் கட்டணத் தொகை அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கருத்துத் தெரிவித்து வந்தனா். இதனால், தனியாா் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனைக் கட்டணத்தை, தமிழக அரசு குறைத்துள்ளது. இதற்கான திருத்தி அமைக்கப்பட்ட கட்டண விபரங்கள் தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, பொதுமக்களுக்கு ஆா்.டி.பி.சி.ஆா்., பரிசோதனைக் கட்டணம் ரூ.3,000-இல் இருந்து ரூ.1,200-ஆக குறைக்கப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் விடுதிகளுக்குச் சென்று மாதிரிகள் சேகரித்தால், கூடுதலாக, ரூ. 300 வசூலித்துக் கொள்ளலாம். முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்பவா்களுக்கு அதிகபட்சமாக ரூ. 800 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →