முகப்பு
தமிழ்நாடு

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை
பகிர்:


சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையின் முக்கிய பகுதிகளிலும், தாழ்வான இடங்களிலும் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், கள்ளக்குறிச்சி, அரியலூா் ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும்.

மேலும், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளது.

சென்னையில், கிண்டி, தாம்பரம், பெரம்பூர், வண்டலூர், மாம்பலம், புழல், கோயம்பேடு, ஆவடி, பட்டாபிராம், சைதாப்பேட்டை, அடையாறு, மெரினா, பெசன்ட்நகர், மயிலாலாப்பூர், போரூர், கேளம்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், அண்ண சாலை உள்ளிட்ட இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →