தேங்காய்ப்பால் சாயனம்
பொங்கல் ஸ்பெஷலில் இதுவும் ஒன்று.
தமிழ்நாடுதேங்காய்ப்பால் சாயனம்
பொங்கல் ஸ்பெஷலில் இதுவும் ஒன்று.
தேவையானவை:
அரிசி மாவு - கால் கிண்ணம்
கெட்டி தேங்காய்ப்பால் மற்றும்
நீர்த்த தேங்காய்ப்பால் - தலா 1 கிண்ணம்
நெய் - 2 தேக்கரண்டி
பொடித்த வெல்லம் - 1 கிண்ணம்
பொடியாக நறுக்கிய தேங்காய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் நெய்விட்டு, தேங்காய்த் துண்டுகளைச் சேர்த்து, சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில், நெய் சேர்த்து அத்துடன் அரிசி மாவை சேர்த்து, வாசனை வரும்வரை நன்கு வறுக்கவும்.
பின்னர், நீர்த்த தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்கவிடவும். பின்னர், கெட்டி தேங்காய்ப்பால், வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்கவும். எல்லாமாக சேர்த்து நன்கு கொதித்து வரும்போது, அடுப்பை அனைக்கவும் வறுத்து வைத்துள்ள தேங்காய்த் துண்டுகளைச் சேர்த்து பரிமாறவும். சுவையான சாயனம் தயார்.