முகப்பு
தமிழ்நாடு

மெரினாவில் ஸ்மார்ட் கடைகள் ஒதுக்கீட்டுக்கு வரும் 20, 21-இல் குலுக்கல்

சென்னை மெரினாவில் ஸ்மார்ட் கடைகள் ஒதுக்கீட்டுக்கு வரும் 20,21-இல் குலுக்கல் நடைபெறும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
சென்னை மெரினாவில் ஸ்மார்ட் கடைகள் ஒதுக்கீட்டுக்கு வரும் 20,21-இல் குலுக்கல் நடைபெறும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பகிர்:

சென்னை: சென்னை மெரினாவில் ஸ்மார்ட் கடைகள் ஒதுக்கீட்டுக்கு வரும் 20,21-இல் குலுக்கல் நடைபெறும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கரோனா ஊரடங்கின் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்து வந்தது. அதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பியதன் காரணமாக, டிசம்பர் 14-ஆம் தேதி முதல் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது.    

அதன் தொடர்ச்சியாக நீதிமன்ற உத்தரவின்படி சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்ட அறிவிப்பில், ‘மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டிகளை கொண்டு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்றும், டிச.21 முதல் 26 வரை அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் என்றும் தெரிவித்தார். அத்துடன் அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து ஜனவரி 6-ல் இறுதி செய்யப்படும்’ என்றும் முன்னதாக அவர் அறிவித்திருந்தார். அதன்படி விண்ணப்பங்களும் பெறப்பட்டன.

இந்நிலையில் சென்னை மெரினாவில் ஸ்மார்ட் கடைகள் ஒதுக்கீட்டுக்கு வரும் 20,21-இல் குலுக்கல் நடைபெறும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சென்னை மெரினாவில் 900 ஸ்மார்ட் கடை ஒதுக்கீடு செய்ய பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களில் இருந்து ஜனவரி 20,21 -ல் குலுக்கல் முறையில் தேர்வு நடைபெறும் என்றும், குலுக்கல் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →