தமிழ்நாடு

பாளையம்பட்டி ஆசிரியர் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 

DIN

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாளையம்பட்டி ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சிக் கல்லூரியில் 2004-2006ம் கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

அருப்புக்கோட்டை பாளையம்பட்டியில் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சிக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் கடந்த 2004-2006ம் கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அக்கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

அப்போது அக்கல்லூரியின் கணித விரிவுரையாளர் வெங்கிடசாமி மற்றும் கல்வித் தொழில்நுட்ப விரிவுரையாளர் அழகப்பன் ஆகியோருக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் சிறப்பு வரவேற்பு மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதையடுத்து அம்மாணவர்கள் நினைவாக அக்கல்லூரிக்கு பீரோ ஒன்று அம்மாணவர்கள் சார்பில் பரிசாக அளிக்கப்பட்டது. 

பின்னர் விரிவுரையாளர் வெங்கிடசாமி தனது சிறப்புரையில் பேசியபோது, 204-2006ம் கல்வியாண்டில்  பயின்ற மொத்தம் 50 மாணவர்களில் 36 பேர் ஆசிரியர் பணி மற்றும் பல்வேறு அரசுப் பணிகளில் தற்போது பணியாற்றுவது இக்கல்லூரிக்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது எனத் தெரிவித்தார். அதையடுத்து முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவராக மேடையில்  தம்மை அறிமுகம் செய்துகொண்டு, கல்லூரிக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு மனநெகிழ்வுடன் மகிழ்ச்சியடைந்தனர்.

தங்கள் வாழ்க்கை அனுபவங்களைக்கூறி, தற்போது இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கல்லூரி விரிவுரையாளர்கள் வாழ்க்கைக் கல்வியாக எடுத்துரைக்கவேண்டுமென விரிவுரையாளர்களுக்குத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT