வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் நடைபெற்ற கோ பூஜை 
தமிழ்நாடு

கம்பம் வேணுகோபால் கிருஷ்ணன் கோவிலில் கோ பூஜை

தேனி மாவட்டம் கம்பம் யாதவ மடாலய வளாகத்தில் உள்ள வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் கோ பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

தேனி மாவட்டம் கம்பம் யாதவ மடாலய வளாகத்தில் உள்ள வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் கோ பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் நவநீதகிருஷ்ண யாதவ மடாலய வளாகத்தில் உள்ள வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் பஜனை மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை கோமாதா பூஜை நடைபெற்றது.

பூஜையையொட்டி  திருப்பாவையில் உள்ள 28வது பாடலான கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம் என்று துவங்கும் திருப்பாவை பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்தனர். பின்னர்  வேணு கோபாலகிருஷ்ணனுக்கு  சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

முன்னதாக  கோவில் வளாகத்திற்குக் கொண்டு வரப்பட்ட பசு மற்றும் கன்றுக்குட்டிக்கு மஞ்சள் குங்குமம் வைத்து, மாலை சூட்டி, அலங்காரம் செய்து, பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT